Tuesday, December 24, 2024

இலங்கையில் ஒரே இரவில் கோடிபதியான அதிஷ்டக் குடும்பம்!

கதிர்காமம்-கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.

கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே இவ்வாறு 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.

கதிர்காமம்-கொச்சிபத்தான பகுதியில் அண்மைக் காலமாக இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலையில், மூன்று பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos