Saturday, November 23, 2024
HomeLatest NewsIndia Newsகாவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மேட்டூர் அணை திறப்பு..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மேட்டூர் அணை திறப்பு..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக காணப்படுகின்றது.

இவ்வாறாக திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை கருத்திற் கொண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னராகவோ திறந்து விடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டிற்கான தண்ணீர் திறப்பு இன்றைய தினம் காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பிற்கான ஏற்பாடுகளை பொதுப் பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News