Sunday, January 26, 2025
HomeLatest Newsஇன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு..!

இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ ற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிற்கு அறிவுறுத்தல் விட்டுள்ளது.

Recent News