Tuesday, December 24, 2024
HomeLatest Newsகொப்பி டு பேஸ்ட் செய்த மெட்டா..!த்ரட்ஸ் மீது வழக்கு…!உறுதிப்படுத்திய எலான் மஸ்க்..!

கொப்பி டு பேஸ்ட் செய்த மெட்டா..!த்ரட்ஸ் மீது வழக்கு…!உறுதிப்படுத்திய எலான் மஸ்க்..!

ட்விட்டர் நிறுவனம் த்ரட்ஸ் மீது வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து வருவதுடன், பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றார்.

அதாவது, ப்ளூ டிக்கினை பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்தில் தொடங்கி, ஒரு நாள் இவ்வளவு பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகளானவை பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது.

இதற்கிடையில், மெட்டா நிறுவனம் ட்விட்டர்க்கு மாற்றீடாக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறிய நிலையில் நேற்றைய தினம் த்ரட்ஸ் ஐ வெளியிட்டிருந்தது.

அதையடுத்து, இந்த புதிய செயலியில் இணைந்த பயனர்கள் சிலர் த்ரட்ஸ் செயலியும் ட்விட்டரை போன்றே உள்ளதாகவும் அத்துடன், ட்விட்டரை காப்பி பேஸ்ட் செய்திருப்பதாகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ், மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து, அதனை உறுதிப்படுத்திய எலான் மஸ்க் போட்டியை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் ஏமாற்றுவதை ஏற்க முடியாது என்றும் ட்விட் செய்துள்ளார்.

Recent News