Wednesday, December 25, 2024
HomeLatest Newsதோனியின் மகளுக்கு மெஸ்ஸி கொடுத்த பரிசு!

தோனியின் மகளுக்கு மெஸ்ஸி கொடுத்த பரிசு!

மஹேந்திர சிங் தோனியின் மகளுக்கு ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி தான் கையெழுத்திட்ட அங்கியொன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து ஆர்ஜென்டீனா சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மெஸியின் கையெழுத்து கொண்ட ஆர்ஜென்டீன அணியின் அங்கி தனக்கு கிடைத்ததை எம்.எஸ். தோனியின் மகளான ஷிவா சிங் தோனி (7) சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்படி அங்கியில் கையெழுத்திடுள்ள லயனல் மெஸி, Para Ziva என எழுதி கையெழுத்திட்டுள்ளார். இதற்கு ஸ்பானிய மொழியில் ‘ஷிவாவுக்கு’ என அர்த்தமாகும்.

லயனல் மெஸியும் எம்.எஸ். தோனியும் ஏற்கெனவே பரஸ்பர அபிமானம், மரியாதையை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News