Friday, April 25, 2025
HomeLatest Newsசீன ஜனாதிபதிக்கு எதிராக கழிவறைகளில் செய்திகள்!

சீன ஜனாதிபதிக்கு எதிராக கழிவறைகளில் செய்திகள்!

சீன ஜனாதிபதி ஆக மூன்றாவது தடவை ஸிஜிங்பிங் தேர்வு செய்யப்பட்டதை எதிர்க்கும் விதமாக, சீனாவில் பொதுக் கழிவறைகளில் செய்திகளை எழுதி வருகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு போராளிகள்.

கழிவறை சுவர்களில் கருப்பு மற்றும் சிகப்பு வண்ண paint கள் கொண்டு, சர்வாதிகார ஆட்சி ஒழிக, covid பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் எனும் வசனங்கள் எழுதப்பட்டு உள்ளன.

சீனாவில் கழிவறைகள் தவிர்ந்த பொது இடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்களை கம்யூனிஸ்ட் கட்சி பொருத்தி இருப்பதால் இவ்வாறான வாசகங்கள் கழிவறைகளில் மாத்திரம் எழுதப்பட கூடியதாக இருக்கின்றது.

இதில் சில இடங்களில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தேசத்துரோகி என குறிப்பிடப்பட்டுள்ளார். சீன காங்கிரஸ் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமையும் இவர்கள் சீன ராணுவத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Recent News