உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்யா கூலிப்படையாக ஈடுபடுத்தி வந்த வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும் மற்றும் வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் சமீப காலமாக கருத்து மோதல் எழுந்துள்ளது.
ரஷ்ய படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலால் வாக்னர் வீரர்கள் 2,000 பேர் கொல்லப்பட்டதாக பிரிகோஷின் குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால், அதற்கு பழி தீர்ப்பதற்காக தமது படை வீரர்கள் 25,000 பேர் ரஷ்யாவிற்குள் ஊடுருவி விட்டதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன், ரஸ்டோவ் நகரிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தான் இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் வந்து தன்னை சந்திக்குமாறும் பிரிகோஷின் காணொளி ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மாஸ்கோவிலுள்ள அதிபர் மாளிகை, முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் ரஷ்ய இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.