இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பல போலி கணக்குகள் உலாவருகின்றன. பெண்களின் பெயரில் பல ஆண்களின் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, ஆண்களின் பெயரில் பல பெண்களின் கணக்குகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், எந்த சந்தர்ப்பத்திலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள் யாரையாவது அம்பலப்படுத்த முயல்கின்றனர்.
சமூக ஊடகங்கள் ஏனையோர் மீது வெறுப்புணர்வினை ஏற்படுத்துவதாக இருக்கின்றமை கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.