Tuesday, December 3, 2024
HomeLatest Newsஎரிபொருள் விலையேற்றத்தினால் துவிச்சக்கரவண்டியில் பிரதேச சபைக்கு சென்ற உறுப்பினர்கள்!

எரிபொருள் விலையேற்றத்தினால் துவிச்சக்கரவண்டியில் பிரதேச சபைக்கு சென்ற உறுப்பினர்கள்!

எரிபொருள் விலையின் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் சபை அமர்வுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49 வது சபை அமர்வானது சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதற்கமைய இரண்டு புதிய உறுப்பினர்களான இ.வேணுராஜ் மற்றும் த.ரவிந்திரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் ஏரிபொருள் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துவிச்சக்கர வண்டியில் சபை அமர்விற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது..

மேலும், புதிய உறுப்பினர்களுக்கு பிரதேசபை உறுப்பினர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதனை அடுத்து சபை அமர்வு தவிசாளரின் தலைமையில் அமர்வானது சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.

இன்றைய தின சபை அமர்வின்போது பல்வேறு விடயங்கள் குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் பல்வேறு தீர்மானங்களும் எடுகக்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாக அறியப்படுகிறது.

இதன்போது புதிய உறுப்பினர்களின் கன்னி உரைகளும் இடம்பெற்றதுடன் இதன்போது புதிய உறுப்பினர்களின் கருத்துகள் குறித்து காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.

Recent News