Tuesday, December 24, 2024
HomeLatest Newsபரபரப்பான நிலையில் திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

பரபரப்பான நிலையில் திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

நாட்டில் தற்போது பரபரப்பான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. அதேவேளை அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் இரவு பகலாக தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் சற்றுமுன் புதிய அமைச்சரவையும்அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆளும் தரப்பு மட்டுமன்றி எதிர்த் தரப்பினரும் தற்போதைய நிலை தொடர்பில் விசேட கூட்டங்களை கூட்டி ஆராய்ந்து வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது விசேட கூட்டமொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடாத்தி வருகின்றனர்.

இதேவேளை குறித்த விசேட கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா!

Recent News