Monday, December 23, 2024

முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் 

முள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி கீரையில் தான் அதிகபடியான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
முள்ளங்கி இலையில் பலவித ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றின் ஆரோக்கிய தன்மைக்கு காரணம் இதிலுள்ள இரும்புசத்து,கால்சியம்,வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களே. மேலும் இது உடலில் உள்ள குறைபாடுகள் பலவற்றை சரி செய்யவல்லது.

சிறுநீரக கற்களை கரைக்க கூடிய அற்புத மகிமை இந்த முள்ளங்கி இலைக்கு உள்ளதாம். இவை இயற்கையிலே அதிக நீர்ச்சத்தைக்கொண்ட உணவாகும். மேலும், சிறுநீரக பாதையில் உள்ள அடைப்புகளையும் இந்த முள்ளங்கி இலை சரி செய்து விடுமாம்.

ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரையின் அளவை குறைக்க இந்த முள்ளங்கி இலை பயன்படும். இந்த முள்ளங்கி இலை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக கிடைத்த வரப்பிரசாதமே ஆகும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு அருமையான மருந்தாக இந்த முள்ளங்கி இலை உள்ளது. மூட்டு சார்ந்த பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவர இந்த முள்ளங்கி இலை சாறு போதும்.

நீங்கள் அதிககாலம் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த முள்ளங்கி இலையை உணவில் சேர்த்தாலே போதும். வாங்க முள்ளங்கி இலையில் ஒளிஞ்சு இருக்கும் மர்மத்தை தெரிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos