Thursday, January 23, 2025
HomeLatest Newsஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவ குழு சாதனை....!

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவ குழு சாதனை….!

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை 14 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரித்து மருத்துவ குழு சாதனை படைத்துள்ளது.

நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவை சவூதியின் சிறப்பு அறுவை சிகிச்சைக் குழு 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரித்துள்ளது.

அதில், 36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு மற்றும் பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை எட்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் சவுதி திட்டத்தின் 56 ஆவது அறுவை சிகிச்சையாக இது திகழ்கின்றது.

கடந்த 33 ஆண்டுகளில் சவுதி திட்டம் 23 நாடுகளைச் சேர்ந்த 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு அல்-ரபீஹ் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்தச் சாதனையானது மக்கள் எங்கிருந்தாலும் மக்களுக்கு உதவுவதற்கான புத்திசாலித்தனமான தலைமையின் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இது சவூதியின் மருத்துவச் சிறப்பையும் பிரதிபலிப்பதுடன், சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களுடன் இராஜ்ஜியத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும் அதன் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News