Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்!

30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்!

ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் இருக்கிறதாம். மேலும், பார்க்க நேற்று செய்த பர்கரை போல பிரஷ்சாகவும் இருக்கிறது . ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேசி டீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் சீஸ் உடன் கூடிய இந்த குவார்ட்டர் பவுண்டர் பர்கரை வாங்கியுள்ளனர்.

இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், “
அப்போது நாங்கள் இளைஞர்கள்.. நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டோம். இருப்பினும், அது அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது.. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஈலோசித்தோம். அப்படி நாங்கள் பேசும் போது இதை அப்படியே வைத்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம்.. அதைத் தான் செய்தோம்” என்கிறார்கள்.சுமார் 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது அந்த பர்கரை அவர்கள் “McFossil” என்று அழைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. மேலும், கெட்டுப்போன வகையில் வாசம் கூட அதில் இருந்து வரவில்லை. இருப்பினும், முதலில் வாங்கப்பட்ட போது இருந்த சைஸ் உடன் ஒப்பிடுகையில் இதன் சைஸ் சிறிது குறைந்துள்ளது

இந்த பர்கரை இத்தனை ஆண்டுகள் சேமித்து வைக்க அவர்கள் ஸ்பெஷலாக எதையும் செய்யவில்லை. பெரும்பகுதி அந்த பர்கர் சாதாரண கப் போர்ட்டில் கண்டெய்னர் ஒன்றில் தான் வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பர்கருக்கு எதுவுமே ஆகவில்லையாம். சில சமயம் எலி அங்கிருந்த மற்ற பொருட்களை எல்லாம் சாப்பிட்டு இருக்கிறது. ஆனால் பர்கரை சாப்பிடவில்லை.இது உலகின் மிகப் பழமையான மெக்டொனால்டு பர்கர் என்று அழைக்கப்படுகிறது.

இதேபோல ஐஸ்லாந்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் பத்தாண்டுகள் பழமையான சீஸ் பர்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இரண்டு பர்கர் அதை விடப் பழையதாக இருக்கிறது.
அதிலும் குளிர்சாதனப் பெட்டியில் கூட வைக்காமல் இந்த பர்கர் அப்படியே இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இதைப் பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள்.

Recent News