Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமாயமான சீன பாதுகாப்பு துறை அமைச்சர் - வலுக்கும் சந்தேகம்..!

மாயமான சீன பாதுகாப்பு துறை அமைச்சர் – வலுக்கும் சந்தேகம்..!

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக, பொதுவெளியில்
சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வராததால் பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.


இந்த நிலையில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்று
ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள்காட்டி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,
ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவல், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்க அரசோ, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும், அல்லது ஏதேனும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறது.

ஆனால், எந்தவிதமான விசாரணை என்பதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாமில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்காததால், இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

Recent News