நைஜீரியாவில் அரச ஊழியர்களான ஆண்களுக்கும் பிரசவகால விடுமுறை வழங்கும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
அரச ஊழியர்களான ஆண்களுக்கு மனைவியின் பிரசவ காலத்தில் 14 நாட்கள் விடுமுறை வழங்கும் திட்டத்துக்கு நைஜீரியாவின் சமஷ்டி கடந்த வருடம் அங்கீகாரம் வழங்கியியிருந்தது.
இத்திட்டம் கடந்த 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நைஜீரியாவின் அரச ஊழியர்களின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி ஃபொலாசேட் யேமி-இசான் தெரிவித்துள்ளார்.
இரு வருடங்களில் ஒன்றுக்கு மேற்படாத தடவை இவ்விடுமுறை வழங்கப்படும் எனவும், ஆகக்கூடுதலாக 4 பிள்ளைகளுக்காக இவ்விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் அரச உத்தியோகத்தரின் குடும்பமானது, 4 மாத வயதுக்குட்பட்ட குழந்தையொன்றை தத்தெடுத்தாலும் அவருக்கு 14 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என கலாநதி யேமி-இசான் தெரிவித்துள்ளார்.