இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி 1.93 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் தங்கத்தின் கையிருப்பானது 29 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் கையிருப்பதில் 2.3 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி இருந்ததுடன் தங்கத்தின் கையிருப்பானது 98 மில்லியன் டொலர்களாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிடம் 3.1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்ததுடன் கடந்த நவம்பர் மாதம் 1.58 பில்லியன் டொலர்கள் என்ற அளவில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து காணப்பட்டது.
எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த போது இலங்கையிடம் 7.5 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிப்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய நாடுகள் உட்பட ஆசிய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே அந்நிய செலாவணி கையிருப்பு மிகப் பெரியளவில் குறைந்து காணப்படுவதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.