Friday, January 17, 2025
HomeLatest News“இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!

“இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச பிரதான வீதியில் இருந்து இன்றைய தினம் 13 ஆம் ஆண்டு இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி தற்போது முள்ளிவாய்க்கால் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க சங்கத்தின் தலைவர் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மதத்தலைவர்கள் இளைஞர்கள் என பலரும் இணைந்து இந்த பேரணியினை நடாத்துகிறார்கள்.

மேலும் இது குறித்து முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த புதுக்குடியிருப்பு பிரதேச கௌரவ உறுப்பினர் ஆ.ஜோன்சன் தெரிவித்ததாவது,

இன்றைய தினம் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துக்க தினத்தை அனுஷ்டிப்பதற்காக மூக்கிலாறு பிரதேசத்திலிருந்து இளைஞர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ளோம்.

மேலும் ராஜபக்ஷ குடும்பத்தினர், இராணுவ அதிகாரிகள் ஆகியோரை சர்வதேச நீதி மன்றில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது எம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழர்களுக்கான விடியலை பெற்றுக்கொடுக்கும் வரையில் இளைஞர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்பதனை சர்வதேசத்தில் இருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு மிகவும் தைரியமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். – என குறிப்பிட்டிருந்தார்.

Recent News