Sunday, January 26, 2025
HomeLatest Newsகொழும்பில் பாரிய போராட்டம்; உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

கொழும்பில் பாரிய போராட்டம்; உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

கொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி நாளை மறுதினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையில் சிவில் அமைப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News