Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மீண்டும் பாரிய போராட்டம்!

அரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மீண்டும் பாரிய போராட்டம்!

அரசின் அடக்கு முறைக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 02ல் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என இன்று இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 02ம் திகதி மருதானை புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள்,மாணவர் அமைப்புகள் அனைவரும் ஒன்று கூடவுள்ளனர்.

ரணில் ராஜபக்க்ஷ அரசாங்கம் காரணம் இன்றி மாணவ தலைவர்கள், தேரர்களை கைது செய்து சட்டம் நடவடிக்கையின்றி கைது செய்து வழக்கு தொடராமல் சிறையில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

யாரும் போராட்டத்தை தடுக்க முடியாது அது அனைவரினது உரிமை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Recent News