Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsதென் பசுபிக்கில் பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கானோர் பலி !!!

தென் பசுபிக்கில் பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கானோர் பலி !!!

தென் பசுபிக்தீவு நாடான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 பேர் வரை பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை எனினும், தற்போதைய மதிப்பீடுகளின் படி 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும்,மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உடல்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News