Wednesday, December 25, 2024
HomeLatest Newsஎரிவாயு கொள்வனவில் பாரியளவில் மோசடி! – வெளியாகியுள்ள தகவல்

எரிவாயு கொள்வனவில் பாரியளவில் மோசடி! – வெளியாகியுள்ள தகவல்

எரிவாயு கொள்வனவின் போது பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்படும் போது பத்து பேருக்கு தரகுப் பணம் செலுத்தப்படுவதாகவும் இதனால் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயு விற்பனை செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் குறைந்த விலைக்கு ரஸ்யா இந்தியாவிற்கு எரிவாயு விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது முதல் ரஸ்யாவிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உக்ரேய்ன் போர் ஆரம்பமாக முன்னதாக ரஸ்யாவின் கேஸ் ப்ரோமி என்னும் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் காணப்பட்டது.

எனினும் இடைத்தரகர்கள் தரகுப் பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கூடுதல் விலைக்கு எரிவாயு இறக்குமதி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே கூடுதல் விலைக்கு இலங்கையில் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.

Recent News