இந்திய இமயமலையில் ஏறியவர்களை பனிச்சரிவு தாக்கியதில் குறைந்தது 26 பேர் இறந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக நான்காவது நாளாகவும் இன்று தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன.
சுமார் 41 மலையேறும் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களைக் கொண்ட குழு, கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு மாநிலமான உத்தரகாண்டின் மலை உச்சிக்கு அருகே ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் 24 பேர் பயிற்சியாளர்கள்,மேலும் இருவர் பயிற்றுவிப்பாளர்கள் என்று இந்திய மலையேறுவோரின் நிறுவனமான நேரு இன்ஸ்டிடியூட் ஒஃப் மவுண்டேனிரிங் தெரிவித்துள்ளது.
எனினும் பயணத்தின் மூன்று உறுப்பினர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எவரெஸ்ட் மற்றும் உலகின் பல உயரமான சிகரங்களின் இருப்பிடமான இமயமலையில் ஆபத்தான ஏறும் விபத்துக்கள் பொதுவானவை என்பது குறிப்பிடத்தக்கது.