பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் வைத்திருந்த நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நீல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இருந்த கட்டடங்கள் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சுமத்தி இருந்ததன் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அத்தோடு 2006-ம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்தாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மரியம் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததோடு,மீண்டும் தீர்ப்பினை எதிர்த்து ஆகஸ்ட் மாதம், நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
வழக்கின் இறுதி முடிவாகத் தற்போது குறித்த கட்டடம் சட்ட விரோதமாகக் கொள்வனவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படாமையால் வழக்கில் இருந்து இருந்து பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின துணைத் தலைவர் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவரை விடுதலை செய்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது மரியம் நவாஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.