Wednesday, December 25, 2024
HomeLatest Newsவிண்வெளியில் திருமணம் - அசர வைக்கும் தனியார் நிறுவனம்..!

விண்வெளியில் திருமணம் – அசர வைக்கும் தனியார் நிறுவனம்..!

விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை வழங்குவதற்கு தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று அழைக்கப்படும் புதிய நிறுவன இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் அவ்வாறு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நபர் ஒருவருக்கு 1 கோடி ரூபாயினை கட்டணமாக அறவிட நிர்ணயம் செய்துள்ளது.

அவ்வாறு விண்வெளியில் திருணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை ஏராளமான ஜன்னல்கள் உடைய ராட்சத கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.

பூமியில் இருந்து புறப்படும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகினை ரசித்தவாறே திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுடன், திருமணம் முடிவடைந்ததும் தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.

இந்த முறையின் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொள்வதற்காக ஏற்கனவே ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த திருமண சேவையை அடுத்த ஆண்டில் இருந்து ஆரம்பித்து வைப்பதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News