Tuesday, December 24, 2024
HomeLatest Newsமார்கழி மாத ராசி பலன் - பண மழையில் நனைய உள்ள 6 ராசிகள்!

மார்கழி மாத ராசி பலன் – பண மழையில் நனைய உள்ள 6 ராசிகள்!

சூரிய பகவான் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக குறிப்பிடப்படுகிறது. டிசம்பர் 16ம் திகதி முதல் தனுசு ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த மார்கழி மாதத்தில் எந்தெந்த ராசியினர் சிறப்பான் பலனைப் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஒவ்வொரு சூரிய பெயர்ச்சியை தமிழ் மாதமாக கணக்கிடப்படுகிறது. டிசம்பர் 16ம் திகதி காலை 9.40 மணிக்கு சூரிய பகவான், தனது நண்பரான குரு பகவானின் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த மார்கழி மாதத்தில் குடும்பம் மற்றும் உத்தியோகம், தொழில் ரீதியாக எந்த ராசிக்கெல்லாம் வெற்றியும், சாதகமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மார்கழி மாதத்தில் சூரியனின் அமைப்பு மேஷ ராசிக்கு மிக சிறப்பான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக மாணவர்கள், கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு, வெளியூரில் படிக்க முயல்பவர்களுக்கு, சாதகமான பலன்கள் கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண முயற்சி வெற்றியும் தரக்கூடியதாக இருக்கும். ஆன்மிக பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். இறைவனின் நாமம் சிந்தனையில் நிறைந்திருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு 4 ஆம் வீடான சுக, தயார் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் சிறப்பான பலனைத் தரும். உங்கள் வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் உங்களை நீங்கள் முன்னிறுத்தவும், உங்களின் திறமையை நிரூபிக்கவும் முடியும்.

ஏற்றுமதி – இறக்குமதி தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபத்தைப் பெறக்கூடிய காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களுக்கு மிகவும் சாதகமான மாதமாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 2 ஆம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் நடப்பதால் நிதி நிலை சார்ந்த முன்னேற்றத்தைப் பெற்றிட முடியும். உங்களின் பேச்சுத் திறன் மேம்படும். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, பணியிடத்தில் சக நண்பர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும் என்பதால் உங்கள் வேலையில் சிறப்பாக முடித்து நல்ல பெயர் பெற்றிட முடியும்.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

​தனுசு

குருவின் ராசியான தனுசு ராசியிலேயே தன் நட்பு கிரகமான சூரிய பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த மார்கழி மாதத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீங்கள் போகும் இடமெல்லாம் புகழ் பெறலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டும் பெற்றிடுவீர்கள். உங்களின் செயல்களுக்கு நல்ல வெற்றியும், பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

​கும்பம்

கும்ப ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்க உள்ளார். நிதி சார்ந்த விஷயங்களில் பெரியளவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் நீங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேறவும், நீங்கள் யார் என காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கு சிறப்பான பலனையும், நல்ல லாபத்தையும் இப்போது அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.

தொழிலில் கூட்டாளிகள் மூலம் நல்ல ஒத்துழைப்பும், லாபத்தைப் பெற்றிட முடியும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்கு பல விதத்தில் நன்மை பெருகக்கூடிய மாதம். தொழில், வேலை சார்ந்த விஷயங்களில் நல்ல வாய்ப்பும், முன்னேற்றமும் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது. படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேறு வேலை மாற நினைப்பவர்களுக்கும் இந்த காலம் சாதக பலனை எதிர்பார்க்கலாம்.

Recent News