Thursday, January 23, 2025
HomeLatest Newsஇனந்தெரியாத நபரின் துப்பாக்கி சூட்டில் பலர் பலி! அமெரிக்காவில் பயங்கரம்

இனந்தெரியாத நபரின் துப்பாக்கி சூட்டில் பலர் பலி! அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒலித்ததை அடுத்து மக்கள் தெருக்களில் ஓடினர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. “இது மிகவும் சோகமான சூழ்நிலை” என்று தலைமை காவல்துறை அதிகாரி கூறினார்.

புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், பொறுப்பானவர்களை அடையாளம் காண உதவும் எந்தவொரு தகவலையும் அளிக்க பொதுமக்கள் முன்வருமாறும் அதிகாரி கூறினார்.

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. அதில், துப்பாக்கியால் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கிறது.

பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தெருவில் சிதறி ஓடுகிறார்கள். சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன.

துப்பாக்கிச் சூட்டிற்கான சூழ்நிலை மற்றும் நோக்கம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் இதுபற்றி அதிர்ச்சியுடன் கூறி உள்ளனர்.

எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறி உள்ளனர்.

சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால், பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Recent News