Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமணிப்பூர் கொடூரம் சிக்கிய கும்பல்..!

மணிப்பூர் கொடூரம் சிக்கிய கும்பல்..!

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் 77 நாட்கள் ஆன பிறகு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.


கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்த நிலையில் அவர் பேசிய அடுத்த சில மணிநேரங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News