Thursday, January 23, 2025
HomeLatest News‘மே – 9’ வன்முறைக்கு மஹிந்தவே பொறுப்பு! டிலான் பகிரங்கக் குற்றச்சாட்டு

‘மே – 9’ வன்முறைக்கு மஹிந்தவே பொறுப்பு! டிலான் பகிரங்கக் குற்றச்சாட்டு

நாட்டில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்குப் பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது. எனவே, மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார். அவரைக் கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால், சர்வதேச ஒத்துழைப்பைப் பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்” – என்றார்.

Recent News