Saturday, November 16, 2024
HomeLatest Newsபாராளுமன்றில் சர்ச்சையில் சிக்கிய மஹிந்த!

பாராளுமன்றில் சர்ச்சையில் சிக்கிய மஹிந்த!

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகுவதாக அறிவித்தார்.

இவ்வாறான நிலையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட களத்தில் புகுந்து வன்முறையாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த அலரிமாளிகையை முற்றுகையிட்டும் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு படையினரின் நீண்ட போராட்டத்தின் பின் அலரிமாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற்றப்பட்டதுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலையில் உள்ள கடற்படைதளத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் பங்கெடுக்கும் பொருட்டு திடீரென மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு சமூகமளித்தார்.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் பாராளுமன்றத்திற்கு மஹிந்த ராஜபக்ச விமானம் மூலம் அழைத்துவரப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியது.

குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தனது ருவிட்டர் பக்கத்தில்,

நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விமானம் மூலம் அனுப்பப்பட்டது பொய்யானது எனவும் சாலை மார்க்கமாக அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்படவில்லை. அது பொய் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News