Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஜப்பானில் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை - பிரதமர் மோடி புகழாரம் ...!

ஜப்பானில் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை – பிரதமர் மோடி புகழாரம் …!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மார்பளவு காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிற்கு 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்தின்போது, ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40 ற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே இன்று(சனிக்கிழமை) காலை ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘ஹிரோஷிமாவில் உள்ள இந்த சிலை ஒரு முக்கியமான செய்தியை அளிக்கின்றது. அமைதி மற்றும் நல்லிணக்கம் என காந்திய லட்சியங்கள் உலகளவில் எதிரொலிக்கின்றது, கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News