Saturday, January 25, 2025
HomeLatest NewsIndia Newsமது வாங்கி தருமாறு அடம்பிடித்த மாது - கடுப்பான கணவன் செய்த காரியம்..!

மது வாங்கி தருமாறு அடம்பிடித்த மாது – கடுப்பான கணவன் செய்த காரியம்..!

மது வாங்கி கொடுக்காமையால் சமைக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் கொன்று புதைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கணவர் தர்மய்யா தலைமறைவாகியுள்ளார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் தர்மய்யாவை, ஆந்திராவில் வைத்து தனிப்படை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருகையில், கணவர் தர்மய்யாவும் மனைவியும் இணைந்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடைமையாகியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் லட்சுமிக மது வாங்கி தருமாறு தனது கணவத்திடம் கேட்க தரமய்யா வாங்கி கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி அடுத்தநாள் சமையல் செய்யவில்லை என கணவரிடம் கூறியதால் கணவர் சண்டையிட்ட பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கணவரிற்கு கூறியுள்ளார்.

அடிக்கடி பூச்சி மருந்து குடித்து விட்டு மனைவி பிரச்சினை செய்து வந்ததால் சகித்துக்கொள்ள முடியாத தரமய்யா மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து புதைத்துள்ளார்.

இதையடுத்து தர்மய்யாவை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் சிறையிலும் அடைத்துள்ளனர்.

Recent News