Wednesday, December 25, 2024
HomeLatest Newsலக்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்க விருப்பமில்லை! ஜனனியின் அதிரடி முடிவு.. எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

லக்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்க விருப்பமில்லை! ஜனனியின் அதிரடி முடிவு.. எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6, கடந்த சீசன்களை விட மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டி ஆரம்பிக்கும் போது 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆறாம் சீசனில் முதல் முறையாக ஒன்பதாவது வாரத்தில் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல் கடந்த வாரம் பிக் பாஸ் மேடையில் அறிவித்திருந்தார்.

அப்போது சரி பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டது.

சில போட்டியாளர்கள் தங்களின் சேவ் கேமிலிருந்து வெளிவரவில்லை. இதனால் ஒட்டிங்கிலும் பாரிய மாற்றங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஷோவுக்கு வந்திருக்கிறார். எவ்வளவு மறைத்தாலும் உண்மையான முகம் காட்டாமல் இருக்கிறீர்கள் என கேலியாக கூறிவிட்டு ஷோவை ஆரம்பித்தார்.

மேலும் சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாக இருப்பது போல் நடித்து வருகிறார்.

இவரின் முகத்திரையை கிழிக்க பல முறை முயற்சி செய்தும் அசறாமல் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யாராக இருக்கலாம் கமல் ஜனனி மற்றும் ஆயிஷாவிடம் கேட்டார்.இதற்கு ஜனனி நான் லக்கில் இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் வெளியேற தயாராக இல்லை என கூறினார்.

மேலும் ஆயிஷாவிடம் கேட்ட போது, கேம் கொஞ்சம் கடினமாக செல்கிறது. இதனால் நான் தான வெளியேறுவேன் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வெளியேறப்போகும் போட்டியாளர் பெயரை கமல் அவர்கள் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.இதன்போது ரசிகர்கள் ஆயிஷா என சத்தமாக கத்தயுள்ளார்கள். தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் பரபரப்பான ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Recent News