பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலில் பல நாள் படகுகள் கரை திரும்பவோ அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக செல்லவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 20 ஆம் திகதி அன்று வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது 22ஆம் திகதியன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.