Wednesday, January 22, 2025
HomeLatest News37 வயதில் காதல் திருமணம்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை

37 வயதில் காதல் திருமணம்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை

பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா பண்டேகர் தனது 37 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ஸ்வேதா கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில், அஜித்திற்கு தங்கையாக அறிமுகமானார்.

பின்பு சில படங்களில் நடித்த இவர், சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவிலிருந்து விலகி சீரியலில் எண்ட்ரி கொடுத்தார்.இவர் 8 ஆண்டுகளாக ஓடி சமீபத்தில் முடிவடைந்த சந்திரலேகா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் இவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

8 ஆண்டுகள் நடித்த சீரியல் முடிவுபெற்ற சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஸ்வேதா.இவர் பிரபல தொகுப்பாளரான மால் முருகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் வருகின்றன.

மேலும் நயன்தாராவைப் போன்றே இவரும் 37 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றதுடன் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recent News