கடற்கரைகளில் ஜோடிகள் உடலுறவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு நெதர்லாந்தில் உள்ள வீரே என்ற நகரில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும் காரணத்தினால் அந்த நகர நிர்வாகம் பீச்சில் உடலுறவு கொள்வதை தவிருங்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடற்கரைகளில், பீச்சில் உடல் உறவுக்கு தடை என்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளத்துடன், கடற்கரைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
சில ஜோடிகள் முன்னதாகவே பிளான் செய்து பீச்சில் நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடுவதாகவும், பீச்களிலும் அருகே இருக்கும் சிறு குன்றுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நகர மேயர், இந்த குன்றுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதால் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் விடுமுறைக்கு வருவோர் இயற்கை சூழலைச் சேதப்படுத்தும் நோக்கில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பீச்சில் நிர்வாணமாக சன் பாத் எனப்படும் சூரிய குளியல் செய்ய வரும் அனைவரும் இது போன்று உடலுறவில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நெதர்லாந்து பாலியல் நிபுணர் யூரி ஓல்ரிச்ஸ், தற்பொழுது உலகின் பல நாடுகளில் பழமைவாத இயக்கத்தின் காரணமாக, உடலுறவு மற்றும் நிர்வாணம் குறித்து வெளிப்படையாகப் பேச முடிவதில்லை.
அவ்வாறு பேச முயல்வோரை ஒடுக்குவது இப்போது டிரெண்டாகி விட்தாகவும் இதனால் தான் பொது வெளியில் உடலுறவு கொள்ளத் தடை விதித்துள்ளனர். இதனால் யாருக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், தற்பொழுது வரை பொது வெளியில் உடலுறவு கொள்வோரிடம் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.