Tuesday, January 14, 2025
HomeLatest Newsவாகன அனுமதிப்பத்திரம் ஊடாக 94 பில்லியன் ரூபா வருமானம் இழப்பு

வாகன அனுமதிப்பத்திரம் ஊடாக 94 பில்லியன் ரூபா வருமானம் இழப்பு

சலுகை முறையிலான வாகன அனுமதிப்பத்திரம் ஊடாக வருடமொன்றில் இலங்கை சுமார் 94 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த தொகையானது வாகன இறக்குமதி வரியின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் வாகன வரிவிதிப்புக் கொள்கை கேலிக்குரிய விடயமாக காணப்படுவதாகவும் பேராசிரியர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வருடமொன்றுக்கு 10 ஆயிரம் வரையிலான சலுகை வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சொகுசு அல்லது அதிக இயந்திர திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு வருடமொன்றுக்கு சுமார் 94 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News