Saturday, January 25, 2025
HomeLatest Newsகொழும்பில் இன்று நீண்ட நேர நீர்வெட்டு...! வெளியான அறிவிப்பு...!

கொழும்பில் இன்று நீண்ட நேர நீர்வெட்டு…! வெளியான அறிவிப்பு…!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று 10 மணிநேரம் நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொலன்னாவை நகர சபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல் கேட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனை அண்மித்துள்ள அனைத்து வீதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

கொலன்னாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமல்படுத்தப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Recent News