Thursday, January 23, 2025
HomeLatest Newsஉலகளவில் முதலிடத்தை பிடித்த லண்டன் - எதற்கு தெரியுமா?

உலகளவில் முதலிடத்தை பிடித்த லண்டன் – எதற்கு தெரியுமா?

உலகில் மிக அதிகமாகப் போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கும் நகரங்களின் பட்டியலில் லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே பட்டியலில் இருந்த லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

லண்டன் இரண்டாம் ஆண்டாக உலகின் அதிகமான போக்குவரத்து நெரிசலுள்ள நகரம் என்ற நிலையில் இருக்கிறது.

பிரித்தானிய தலைநகரான லண்டனில் வாகனமோட்டிகள் ஆண்டுக்குச் சராசரியாக 156 மணி நேரம் போக்குவரத்தில் காத்திருப்பதாக Inrix நிறுவனம் தகவல் வழங்கியது.

இந்நிலையில் Inrix நடத்திய ஆய்வில் 50 நாடுகளிலுள்ள 1,000 நகரங்கள் சேர்க்கப்பட்டன.

லண்டனில் சென்ற ஆண்டு போக்குவரத்து நெரிசலால் இழக்கப்பட்ட நேரம் கொரோனா பரவலுக்கு முந்திய காலக்கட்டத்தைக் காட்டிலும் 5 சதவீதம் உயர்ந்தது.

Recent News