சேர்ந்து வாழ்வதை திருமணம் என்று அங்கீகாரம் செய்ய முடியாது எனவும் அவர்களிற்கு விவாகரத்து என்ற வசதியும் கிடையாது என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று சில வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். தற்பொழுது அவர்களிற்கு 16 வயதில் பிள்ளையும் உள்ளது.
இந்நிலையில், தாங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அதனால் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஆயினும், அவர்களது திருமணம் முறையாக நடைபெறாத காரணத்தினால் நீதிமன்றம் அந்த முறைப்பாட்டை தள்ளுபடி செய்துள்ளது.
அதனால், தம்பதிகள் ஐகோட்டில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் நீதிபதிகள் இந்த மனு குறித்து பிறப்பித்த உத்தரவில் சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது என்றும் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஜோடி அதை திருமணம் என்று கூறவும் அதன் அடிப்படையில் விவாகரத்து பெறவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், குறிப்பிட்ட ஜோடி தமக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக் கொள்ளலாம் என்றும், அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் குறிப்பிட்டு அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.