Saturday, January 11, 2025
HomeLatest Newsஇன்றுமுதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

இன்றுமுதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5Kg) விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 5,175 ரூபா வரை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்தாலும் அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்தால் நாளாந்தம் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதன் காரணமாக விலை அதிகரிப்பை தவிர்க்க வேறு மாற்று வழியில்லை எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை இன்று முதல் சந்தையில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு இருப்புகளை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாகவும், மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் ​​லிட்ரோ தலைவரான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிவாயு விநியோக பொறிமுறையானது வழமைக்குத் திரும்புவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலமாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Recent News