Thursday, January 23, 2025
HomeLatest Newsமீண்டும் அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயு விலை!

மீண்டும் அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயு விலை!

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கொல்களன் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எனினும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் எரிவாயு கொல்களன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Recent News