Wednesday, December 25, 2024
HomeLatest Newsலிட்ரோ எரிவாயு விலை குறைப்பு - வெளியானது புதிய விலை விபரம்..!

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு – வெளியானது புதிய விலை விபரம்..!

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (03.05.2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,638 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.

இந்நிலையில் லாஃப் எரிவாயு நிறுவனம் எந்தவித விலை குறைப்புகளையும் மேற்கொள்ள மாட்டாது என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News