Wednesday, December 25, 2024
HomeLatest Newsலிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்கமைய, சிலிண்டர் ஒன்றின் விலையை 5,100 ரூபா அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லிட்ரோ 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 4,860 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News