Saturday, January 11, 2025
HomeLatest Newsஎரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோஎரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளதாகவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் பெரும்பாலும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் மூலம் மொத்தமாக 8,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent News