Wednesday, December 25, 2024
HomeLatest Newsமக்கள் வாழ ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு ...!இடம்பிடித்த உக்ரேனிய நகரம்...!

மக்கள் வாழ ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு …!இடம்பிடித்த உக்ரேனிய நகரம்…!

மக்கள் வாழ்கை நடத்துவதற்கு ஏற்ற நகரங்களின் உலகளாவிய தர வரிசைப் பட்டியலில் சென்னையும் இடம் பிடித்துள்ளது.

உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் போன்றன தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது.

அந்த அடிப்படையில், எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இந்தியாவிலிருந்து ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி, மும்பை நகரங்கள் 60 வது இடத்தை பிடித்துள்ளன.

அதற்கு அடுத்த இடங்களை சென்னை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் பிடித்துள்ளன.

அத்துடன், ஆஸ்ரேலியா தலைநகர் வியன்னா முதலாவது இடத்தையும், டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி முறையே 3 மற்றும் 4 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன.

மேலும் போர் நடந்து வரும் உக்ரைனின் கிவ் நகரம் 165 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News