Wednesday, January 22, 2025
HomeLatest Newsபிரபல நடிகருக்கு உதட்டு முத்தம்- சர்ச்சையில் சிக்கிய தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரபல நடிகருக்கு உதட்டு முத்தம்- சர்ச்சையில் சிக்கிய தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகை தமன்னா, பிரபல பாலிவுட் நடிகருடன் புத்தாண்டு கொண்டாடிய பார்ட்டி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வந்தார். பின்னர் தமிழில் பட வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை அருண் கோபி இயக்க உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

இந்தநிலையில் தமன்னா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.

தற்போது அவர் பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீப காலமாக அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர்.

இதன்படி சமீபத்தில் நடிகை தமன்னா தனது 33 வது பிறந்தநாளை டிசம்பர் 21 திகதி கொண்டாடினார். இந்நிலையில் கோவாவில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் இணைந்து பார்ட்டியில் பங்கு பெற்று விஜய் வர்மாவுக்கு தமன்னா முத்தம் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Recent News