அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் டென்வர் பகுதியில் பிரன்டன் கோல் வசித்து வருகின்றார். இவர் மனைவி சக்க நாற்காலியின் உதவியுடனே நடமாடி வரும் நிலையில் இருவருக்கும இடையிலேற்பட்ட தகராற்றின் காரணமாக சக்கர நாற்காலியிலிருந்து மனைவியைத் தள்ளி விட்டதாக டென்வர் காவற்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந் நிலையில் இச் சம்பவம் இடம்பெற்ற பொழுது கோல் மதுபோதையிலிருந்தாரா , மனைவிற்கு காயங்கள் ஏற்பட்டதா போன்ற உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதேவேளை இச் சம்பவத்தையறிந்து பொலிசார் குறித்த இடத்திற்கு சென்ற போது கோலின் மனைவி சக்கர நாட்காலிக்கு அருகில் காணப்பட்டதாகவும் கோல் மனைவியைத் தாக்க முற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கோல் மனைவியைத் தாக்க முற்பட்டபோது பொலிசார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரைக் கைது செய்ய முற்பட்டனர். அத் தருணத்தில் கோலின் கையில் கத்தி போன்ற உபகரணம் இருப்பதைக் கண்ட பொலிசார் அவரை சுட்டனர். குறித்த சம்பவ இடத்திலே கோல் உயிரிழந்தார்.
இதேவேளை கோல் உயிரிழந்த பின் அவரை பரிசே்தித்த போது கையிலிருந்த உபகரணம் கத்தியில்லை அது ஒரு கருப்பு மார்க்கர் பேனா என அறிய வந்தது. இந் நிலையில் குறித்த சூட்டு சம்பவம் துரதிஸ்டவசமாக நடைபெற்றதென டெஸ்வர் காவற்துறை ஆணையர் தெரிவிததுள்ளார். சூட்டை நடாத்திய காவற்துறையாளர் மீது மாவட்ட நீதித்துறை தான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.