Thursday, January 23, 2025
HomeLatest Newsஎதிர் நாட்டு வீரருடன் கைகுலுக்கிய இஸ்ரேல் வீரருக்கு ஆயுட் தடை….!

எதிர் நாட்டு வீரருடன் கைகுலுக்கிய இஸ்ரேல் வீரருக்கு ஆயுட் தடை….!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையே நீண்ட.காலமாக பகை தொடர்ந்தவண்ணமுள்ளது. இஸ்ரேலை தனது நாடென ஈரான் உரிமை கோரி வருவதால் இப் பிரச்சினை தொடர்ந்தவண்ணமுள்ளது.

இந் நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு ஈரானின் முக்கிய தலைவரான அப்துல்லா அலி கமேனி ஈரான்நாட்டு வீரர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்ரேல் நாட்டு வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாதென அறிவித்திருந்தார்.

இதன் விளைவாக இஸ்ரேல் வீரர்கள் தடகளப் போட்டிகளீல் பங்கேற்பதைத் தவிர்த்தது வந்தனர். தாமாகவே தகுதி நீக்கம் பெறுவதுடன் மருத்துவச் சான்றிதழை வழங்கி போட்டியிலிருந்து விலகுதல் போன்ற உத்திகளைக் கையாண்டனர்.

இதேவேளை போலந்தில் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற பளுதூக்குதல் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த மொஸ்தபா ராஜேய் என்ற வீரர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்ஸிம் ஸ்விர்ஸ்கி என்பவருடன் கைகுலுக்கிக் கொண்டமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து குறித்த வீரர்இஸ்லாமிய குடியரசின் சிவப்பு கோட்டை தாண்டி விட்டதால் அவருக்கு ஆயுட் தடை விதிக்கவுள்ளதாக ஈரான் நாட்டு பளு தூக்குதலுக்கான கூட்டமைப்ானது அறிவித்துள்ளது.

இதேவேளை மொஸ்தபா கடந்த 2015 ம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற ஆசிய பழுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈரான் நாட்டிலிருந்து தேசிய வீரராக பங்கெடுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Recent News