Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் போரை நிறுத்த முன்னின்று செயற்படுவோம் -அஜித் தோவால் சூளுரை..!

உக்ரைன் போரை நிறுத்த முன்னின்று செயற்படுவோம் -அஜித் தோவால் சூளுரை..!

ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா நடத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் உச்சி மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் மோதலுக்கு நீடித்த, விரிவான தீர்வைக் கண்டறிவதில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும் எனவும் . ஐ.நா. கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உலகளாவிய ஒழுங்கமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தோவல் வலியுறுத்தினார்.

ஏற்கனவே உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளையும், உலகளாவிய தெற்கில் உள்ள அண்டை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சுமார் 30 நாடுகள் பங்கேற்கும் இக் குறித்த உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றிருப்பது சாதகமான பதில்கள் கிடைக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இக் குறித்த பேச்சுவார்த்தையில் இறுதியாக போரைத் தீர்ப்பதற்கான கொள்கைகளுக்கு குறித்த சந்திப்பில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது .

Recent News