Friday, November 15, 2024
HomeLatest Newsதிருக்கோணேஸ்வரத்தை பாதுகாக்க 120 கோடி இந்துக்களும் இணைவோம்! – தமிழக இந்து மக்கள் கட்சி அழைப்பு

திருக்கோணேஸ்வரத்தை பாதுகாக்க 120 கோடி இந்துக்களும் இணைவோம்! – தமிழக இந்து மக்கள் கட்சி அழைப்பு

திருகோணமலை சிவன் கோயில், அங்கு வசிக்கும் பூர்வக்குடி இந்து தமிழர்களை பாதுகாப்பதற்கு உலகெங்கும் இருக்கக்கூடிய 120 கோடி இந்துக்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியின் நிறுவுநர் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலைகளை நிறுவி சிவன் கோயிலை அழிக்க முயன்றால் குடியேற்றி இந்துக்களின் பௌத்தர்களை நம்பிக்கை வாழ்வியலைச் சிதைக்க முயன்றால் பாபர் மசூதிக்கு அயோத்தியில் என்ன நடந்ததோ, திருகோணமலையில் பௌத்த விகாரைகளுக்கும் புத்தருக்கும் நடக்கும் – என்றும் எச்சரித்துள்ளார்.

இராவணன் காலத்துக்கு முந்தைய 10,000 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பழமையான திருகோணேச்சரம் சிவன் கோயிலை முதன்முதலாக 400 ஆண்டு களுக்கு முன்னர் இடித்தனர் கத்தோலிக்கர்கள்.

“இராமனுக்கு அயோத்தி, இராவணனுக்கு திருகோணமலை” என்று 120 கோடி இந்துக்கள் உலகெங்கும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களின் வாழ்வியல். அந்நிய ஆக்கிரமிப் பாளர்கள் அயோத்தியில் மசூதியைக் கட்டினர். 120 கோடி இந்துக்களுமாக அதை அகற்றினார்கள். தற்போது அங்கே இராமருக்குக் கோயில் கட்டுகிறார்கள்.

ஆக்கிரமிப்பாளராக பௌத்த சம யத்தவர் திருகோணமலையில் புத்தர் சிலைகளை நிறுவி சிவன் கோயிலை அழிக்க முயன்றால் – பௌத்தர்களைக் குடியேற்றி இந்துக்களின் நம்பிக்கை வாழ்வியலைச் சிதைக்க முயன்றால் பாபர் மசூதிக்கு அயோத்தியில் என்ன நடந்ததோ, திருகோணமலையில் பௌத்த விகாரைகளுக்கும் புத்தருக்கும் நடக்கும்.

120 கோடி இந்துக்கள் சார்பில் பௌத்த சமய, இனவாத வெறியர்களை எச்சரிக்கிறேன். திருகோணமலை மாவட்டத்தின் பூர்வகுடிகள் இந்து தமிழர்கள் சைவர்கள் ஆவார்கள்.

இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மதவெறி கண்ணோட்டத்தோடு இந்து தமிழர் களின் அடையாளமாக திகழும் சிவன் கோயிலை ஆக்கிரமிக்க முயற்சிப்பதும் இராவணன் வெட்டு என்பதனை பெளத்த தடயமாக மாற்ற முயற்சிப் பதும் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புத்தர் சிலையை வைத்து ஆக்கிரமிக்க முயற்சிப்பதும் திருகோணமலையில் உள்ள இந்து தமிழர்களின் அடையா ளங்களை அழிக்க முயற்சிப்பதும் உட னடியாக நிறுத்த வேண்டும்.

இது குறித்து இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கத்திடம் எச்சரிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடமும் இந்து மக்கள் கட்சி யின் சார்பில் புகார் செய்யப்படும். திருகோணமலை சிவன் கோயில் மற்றும் திருகோண மலையில் வசிக்கும் பூர்வகுடி இந்து தமிழர்களை காப்பாற்றிட உலகெங்கிலும் இருக்கக்கூடிய 120 கோடி இந்துக்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம் – என்று அர்ஜூன் சம்பத் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News